1720245849 ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் - பி.எஸ்.பி. மாநில செயலாளர் குற்றச்சாட்டு https://www.dailythanthi.com//News/State/armstrong-murder-laxity-by-police-intelligence-bsp-secretary-of-state-charges-1112831

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் - பி.எஸ்.பி. மாநில செயலாளர் குற்றச்சாட்டு

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காவல்துறை மற்றும் உளவுத்துறையின் மெத்தனப் போக்கின் காரணம்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம்.

நாளை (ஜூலை 07) பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தமிழ்நாடு வரவுள்ளார். எங்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான குற்றவாளியை கைது செய்ய வேண்டும்" என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

html 1720244503 ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சி அளிக்கிறது - ராகுல் காந்தி https://www.dailythanthi.com//News/State/amstrongs-murder-is-shocking-rahul-gandhi-1112829

ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சி அளிக்கிறது - ராகுல் காந்தி

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர், மேலும் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.

html 1720242797 ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது https://www.dailythanthi.com//news/state/armstrong-supporters-block-road-in-front-of-rajiv-gandhi-hospital-1112827

ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு  சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. . இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

html 1720241906 ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் https://www.dailythanthi.com//news/state/we-hacked-him-to-death-on-his-brothers-birthday-surrenders-sensational-confession-1112826

ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்தனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த ஆர்காடு சுரேசின் தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னதாக அண்ணன் ஆற்காடு சுரேசின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு பாலு தீட்டம் தீட்டி இருந்ததாக தெரிகிறது.

இந்த சூழலில் ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ராங்கின் ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் விடுத்ததால் தனது மனைவி பிரிந்து சென்று விட்டார் என்றும் அண்ணனும் இல்லை, மனைவியும் இல்லை என்பதால் தன்னையும் கொல்வதற்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு பாலு திட்டம் தீட்டியதாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்னரசு கொலை வழக்கில் தன்னோடு சிறையில் இருந்தவர்கள், சுரேசின் கிளப் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் சேர்ந்து கொலை செய்ததாகவும், ஆற்காடு சுரேசின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக உளவுத்துறையும், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், உளவுத்துறையின் எச்சரிக்கையை செம்பியம் போலீசார் கண்டு கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எப்போதும் ஆதரவாளர்கள் உடன் இருக்கும் ஆம்ஸ்ட்ராங் தனியாக இருக்கும் நேரத்தை கொலை கும்பல் கண்காணித்து வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

html 1720241628 அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன? https://www.dailythanthi.com//News/State/today-gold-rate-in-chennai-1112825

Today Gold Rate in Chennai

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு எவ்வித மாற்றமின்றி ரூ.520 விற்று வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.54,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ரூ.99.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

html 1720238463 ஆம்ஸ்ட்ராங் கொலை பேரதிர்ச்சியை தருகிறது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் https://www.dailythanthi.com//news/state/armstrongs-murder-is-shocking-chief-minister-mk-stalin-1112819

ஆம்ஸ்ட்ராங் கொலை பேரதிர்ச்சியை தருகிறது:  முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 8 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

html 1720237616 "ஆம்ஸ்ட்ராங் மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்" - திருமாவளவன் https://www.dailythanthi.com//News/State/armstrongs-death-is-a-tragedy-for-an-oppressed-community-thirumavalavan-1112817

ஆம்ஸ்ட்ராங் மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும் - திருமாவளவன்

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பவுத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பவுத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பவுத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதியின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை - எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

html 1720237409 ஆம்ஸ்ட்ராங் கொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது - சீமான் கண்டனம் https://www.dailythanthi.com//News/State/armstrong-murder-law-and-order-has-deteriorated-in-tamil-nadu-seeman-condemns-1112816

ஆம்ஸ்ட்ராங் கொலை:  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது - சீமான் கண்டனம்

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள்தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதல்-அமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம். என தெரிவித்துள்ளார்.

html 1720236976 ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு https://www.dailythanthi.com//News/State/police-gather-in-front-of-rajiv-gandhi-hospital-where-armstrongs-body-is-kept-1112815

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு  போலீசார் குவிப்பு

ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார்.அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வருகிறார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தினமும் இரவு பெரம்பூரில் தான் கட்டும் புதிய வீடு அருகே நண்பர்கள், கட்சிக்காரர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்.

அதுபோல, நேற்று இரவு 7 மணியளவில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் அங்கு வந்தார்கள். அவர்கள் கையில் பட்டா கத்திகள் இருந்தன. மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கினார்கள்.

சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் அலறியபடி கீழே சாய்ந்தார். அவருடன் இருந்த அவரது நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க பார்த்தனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் 6 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதில், பாலாஜி என்பவருக்கும் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை நடந்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களும், ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.

இதனிடையே இரவோடு இரவாக 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணைக்கு பிறகுதான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் கூறினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஆம்ஸ்ட்ராங் உடல் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. இதனிடையே, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

html 1720235839 2 நாளில் வேறு ஒருவருடன் திருமணம்... வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம்பிடித்த இளம்பெண் https://www.dailythanthi.com//news/state/married-in-2-days-a-young-girl-married-her-boyfriend-1112814

2 நாளில் வேறு ஒருவருடன் திருமணம்... வீட்டின் சுவர் ஏறி குதித்து காதலனை கரம்பிடித்த இளம்பெண்

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் செல்வின் தேவகுமார். இவருடைய மகள் பெமிஷா (வயது 23). எம்.ஏ. பட்டதாரி. இவர் மேற்கு நெய்யூரை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்பவரை கடந்த 6 வருடமாக காதலித்து வந்துள்ளார். ஸ்ரீராம் பி.இ. படித்துவிட்டு பெங்களூருவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதல் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெமிஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அவர் காதலை கைவிட மாட்டேன் என உறுதியாக இருந்தார். அவரை பெற்றோர் சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் மகளை வீட்டு சிறையில் வைத்தனர்.

மேலும் பெமிஷாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். அதற்கு சம்மதம் தெரிவித்து பொற்றோருடன் உடன்பட்டு நடப்பது போல் நடிக்க தொடங்கினார் பெமிஷா. அதன்படி பெமிஷாவுக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் பெமிஷாவின் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இதனால் பெமிஷாவுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது. எப்படியாவது தப்பித்து சென்றுவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெமிஷா வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது குடும்பத்தினரின் கண்காணிப்பை மீறி கண்ணிமைக்கும் நேரத்தில் சுவர் ஏறி குதித்து தப்பியோடினார். பின்னர் காதலன் ஸ்ரீராமுவுடன் குளச்சல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து போலீசார் இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பெமிஷாவின் பெற்றோர் மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு போலீசிடம் தெரிவித்தனர். ஆனால் பெமிஷா காதலன் ஸ்ரீராமுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இருவரும் மேஜர் என்பதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் காதல் ஜோடிக்கு அறிவுரை வழங்கி பதிவு திருமணம் செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சுவர் ஏறி குதித்து காதலனை இளம்பெண் கரம்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

html 1720234776 ஆம்ஸ்ட்ராங் கொலை: சட்டம் ஒழுங்கை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் - விஜய் வலியுறுத்தல் https://www.dailythanthi.com//News/State/armstrongs-murder-tamil-nadu-government-should-restore-law-and-order-vijay-insists-1112812

ஆம்ஸ்ட்ராங் கொலை:  சட்டம் ஒழுங்கை தமிழக அரசு நிலைநாட்ட வேண்டும் - விஜய் வலியுறுத்தல்

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

html 1720232951 ஆம்ஸ்ட்ராங் கொலை: சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் கூறியது என்ன..? https://www.dailythanthi.com//News/State/armstrong-murder-the-information-given-by-additional-commissioner-of-chennai-north-zone-1112809

ஆம்ஸ்ட்ராங் கொலை:  சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் கூறியது என்ன..?

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழலில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு உள்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், "முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்த வெறும் 4 மணி நேரத்தில் அவர்களை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பின்னர் கொலைக்கான நோக்கம் என்ன..? யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். கொலை சம்பவத்தின்போது கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. கத்தியால் வெட்டிதான் கொலை செய்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

தற்போது சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


html